ஆன்மீகம்

ஜெபமாலை

கத்தோலிக்க திருச்சபை அக்டோபர் மாதத்தை ஜெபமாலை மாதமாக அனுசரித்து வருகிறது. அக்டோபர் மாதம் ஜெபமாலை அன்னைக்குரிய மாதம்.

கி.பி. 1214ல் புனித தோமினிக் வழியாக அன்னை மரியாள் செபமாலையை திருச்சபைக்கு வழங்கினார்கள். அக்காலத்தில் ஆல்பிஜென்சியன்ஸ் என்ற முரண்பாட்டுக் கொள்கையினர் மனம் மாறி திருச்சபைக்குத் திரும்பி வரவேண்டுமென்று புனித தோமினிக் செபித்து வந்தார்.

அன்னை மரியாள் புனித தோமனிக்குக் காட்சி தந்து எதிரிகளை, முரண்பாட்டுக் கொள்கையினர்களை, பாவிகளை முறியடிக்கும் ஒரே கருவி செபமாலை என்று கற்றுக் கொடுத்தார்கள். அந்த நாளிலிருந்து தனது வாழ்நாள் முழுவதும் புனித தோமனிக் செபமாலையின் புகழையும் பெருமையையும் தனது போதனைகளின் வழியாகப் போதித்து அறிக்கையிட்டு வந்தார்.

ஓவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் செபமாலை மாதாவின் வணக்க மாதமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ஜெபமாலை மாதாவின் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

ஜெபமாலையில் நாம் சிந்திக்கும் மகிழ்ச்சி நிறை பேருண்மை , ஒளி நிறை பேருண்மை , துயர் நிறை பேருண்மை , மகிமை நிறை பேருண்மை யாவும் இயேசுவின் பிறப்பு முதல் உயிர்ப்பு வரை உள்ள புதிய ஏற்பாட்டின் நற்செய்திகளை நம்மை சிந்திக்க வைக்கிறது.

இரண்டாம் உலகப் போர் முடிவில் 1945 ஆகஸ்ட் 6 ஆம் திகதி, சின்னப் பையன் என்ற அணு குண்டை ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா நகரில் அமெரிக்கா வீசியது. அதன் விளைவாக சுமார் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்தனர். ஆனால் அப்போது அந்நகரின் மையத்தில், குண்டு வீசப்பட்ட இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த விண்ணேற்பு அன்னைஆலயமும், அதனோடு இணைந்திருந்த இயேசு சபை இல்லமும் மட்டும் கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து தப்பின. அந்த இல்லத்தில் இருந்த இயேசு சபை குருக்கள் அனைவரும் எந்த காயமும் இன்றி உயிர் பிழைத்தனர். உயிர் தப்பிய குருக்கள், “பாத்திமா அன்னையின் செய்தியின்படி வாழ்ந்ததால்தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்று நம்புகிறோம்; தினமும் செபமாலைசெபிக்கும் வழக்கமே எங்களைக் காப்பாற்றி இருக்கிறது” என்று செபமாலை அன்னைக்கு சான்று பகர்ந்தனர்.

இன்றும் குடும்ப ஜெபமாலை செய்யும் குடும்பத்தினர் தங்கள் வாழ்வில் பல அற்புதங்களை அன்னையின் பரிந்துரையின் பேரில் அடைந்து வருகின்றனர்.

ஜெபமாலை மிகவும் அழகுவாய்ந்த , ஜெபங்களில் எல்லாம் அதிக அருள்வரங்களைப் பொழிகின்ற ஜெபம். அது தேவ தாயாரின் இதயத்தைத் தொடுகின்ற ஜெபம்… நீங்கள் உங்கள் இல்லங்களில் அமைதி தவழ வேண்டும் என்று விரும்பினால், குடும்ப ஜெபமாலை சொல்லுங்கள்.” என்று சொல்கின்றார் — திருத்தந்தை புனித பத்தாம் பத்திநாதர்.

எனவே தினமும் ஜெபமாலை சொல்வோம். ஜெயம் பெறுவோம்.


வத்திக்கான் வானொலி

தினசரி தமிழ் ஒலிபரப்பு

இன்றைய ஒலிபரப்பை கேட்க
இங்கே சொடுக்கவும்
Click Here

வத்திக்கான் வானொலிக்கு நன்றி

www.arulvakku.com
வழங்கும்

அன்றாட அருள்வாக்கு
சொடுக்கு/Click

‘அருள்வாக்கு’-க்கு நன்றி


[do_widget id=adwidget_htmlwidget-4]

 

[do_widget id=adwidget_htmlwidget-5]